முடிவுகள் உங்கள் கையில்
மேலைத்தேய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்றதாக சொன்னாலும், சிறுபான்மை இனம் இன்றும் அடிமை வலைக்குள் தன்னை பழக்கி கொண்டு விட்டது. 1948 இல் சுதந்திரம் அடைந்த துடக்கம் தமிழன் தன்னுடைய தனியுரிமை நிலை நாட்ட சாத்வீக பாதையில் நடை போட்டான். தமிழனின் சாத்வீக போராட்டத்தை, தமிழரின் பலவீனம் என்று சிந்தித்த சிங்கள பேரினவாதம், தமிழனை அடக்க சிங்கள தனி சட்டம், பல்கலை கழக தரப்படுத்தல் என்று பல யுக்திகளை கையாண்டது.
சிங்களம் தான் ஒரு தேசிய மொழி என்றும் இது சிங்களவரின் நாடு என்றும் கங்கணம் கட்டி கொண்டது. தமிழனின் ஆதங்கத்தை செவிமடுத்து கேட்க சிங்களம் தயாராக இல்லை. இதை அறிந்த தந்தை செல்வா தமிழ் ஈழம் தான் தமிழருக்கு விடிவை குடுக்கும் என்று முடிவுக்கு தள்ளப்பட்டார்.
விரக்தி அடைத்த தமிழ் வீரர்கள் ஆயுதம் தாங்க புறப்பட்டார்கள். ஒழுக்கம், கண்ணியம் ,
கட்டுப்பாடு என்று கொள்கை வகுத்து போராடினார்கள் விடுதலை புலிகள். தமிழரின் விடுவிக்காய் கடந்த முப்பது எட்டு வருடகாலமாக போராடிய விடுதலை இயக்கம் நயவஞ்சக தனமாக தோற்கடிக்கப்பட்டு விட்டது.
என்னுடைய அன்பானத தமிழ் ஈழ மக்களே இனி நாம் என்ன செய்ய போரும்....
சிந்தியுங்கள்
- அடிமையாக சலுகைகளை மட்டும் பெற்று வாழ போறோமா
- நாம் தனித்துவமான இனம் என்று புரிய வைக்க போறோமா