புதியயுகம்
Search This Blog
Welcome
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
புதிய யுகம் உங்கள் வாக்குகளையும் பின்னூட்டல்களையும் எதிர்பார்க்கின்றது
Labels
- அரசியல் (2)
- ஆங்கில செய்தி (1)
- உலக சினிமா (3)
- கணினி வளாகம் (3)
- சமுதாயம் (4)
- தமிழ் சினிமா (1)
- தெனலிராமன் சிறுகதைகள் (4)
- தொழில்னுட்பம் (3)
- நகைச்சுவை (1)
- படித்ததில் பிடித்தது (3)
- பாடல் வரிகள் (2)
Today's Referrer
தமிழ் அகராதிகள்
Blog Archive
-
▼
2010
(24)
-
▼
February
(16)
- Muralidharan the controversial spin bowler has dec...
- பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
- இந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும்
- அதிசயக்குதிரை
- தென்பகுதி குளங்கள் விவசாயத்துக்கும், யாழ் பகுதி கு...
- வெளிவந்து விட்டது Firefox 3.6
- கையடக்க தொலைபேசியில் இலகுவாக தமிழ் எழுத்துக்கள்.
- அஸ்கார் விருதை தட்டிச்செல்லுமா? இந்தியபடமான "கவி"
- யாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்க...
- முடிவுகள் உங்கள் கையில்
- என்னாச்சு சரணுக்கு? அசல் - விமர்சனம்.
- "ஆயிரத்தில் ஒருவன்" ஒரு தமிழீழ முழக்கம்
- ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான ப...
- 'அவதார்' 9 அஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட...
- இணையத் தகவல் பரிமாற்ற முகவரியை மறைப்பது எப்படி?
- எங்களது அடையாலங்களை தொலைத்து விட்டு எங்கே செல்லப்ப...
-
▼
February
(16)
உறுப்பினர்கள்
வளர்ச்சிக்காக..
Tamil Radios by Puthiyayukam
Tamil Radios 50+ Online Radio
CHOOSE YOUR SONGS AND RADIO




யாழ்ப்பாணத்தின் முக்கிய குளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தலா 100 ஏக்கர் காணிகளில் சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை சுற்றுலாத்துறை அமைச்சு அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் அவர்களைக் கவரும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றதன.
இதன் ஒரு படியாக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த முக்கிய குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. குளத்திலுள்ள தாவரங்கள் மற்றும் சேறு என்பன இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளைப் பிரதேச சபைகள் மேற்கொண்டு வருகின்றன.
குளங்கள் புனரமைக்கப்பட்டு, நீரும் சுத்திகரிக்கப்பட்டு குளங்கள் அருகில் அழகு நிறைந்த காட்சிகளை உருவாக்கி, நிழல் குடைகள், சாய்மனைகள் (பென்ச்) கட்டப்படவுள்ளதாக குளங்கள் சுத்திகரிக்கும் தொழில்நுட்ப அலுவலகர் ஒருவர் தெரிவித்தார்.
=====================
தென்பகுதி குளங்கள் விவசாயத்துக்கும், யாழ் பகுதி குளங்கள் சிங்களவரின் சுற்றுலா - கேளிக்கைக்கும்.
யாழ் மாநகர சபை போகும் போக்கு எங்கே?
யாழ் மக்கள் விழிப்படைந்து வரும் தேர்தலில் பாடம் புகட்டுவரா?
உலகின் மிகச்சிறந்த பிரவுசர் எது என்று பார்த்தால் அது பயர்பாக்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய தொகுப்பினை மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதிய பயர்பாக்ஸ் முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம்வேகமாக உள்ளதாக சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர்.
ஒப்பரா(Opera) பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகமாக இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.
இந்த பிரவுசரில் பெர்சனாஸ் காலரி நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. ஒரு பெர்சனாஸ் காலரி மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம்.
பிரபலமான இன்டர்நெட் பிரவுசர்களின் தரவரிசை இங்கே சென்று நீங்கள் பார்வையிடலாம். பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனையும் உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.
இங்கே சிறப்பம் என்ன வென்றால் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது. இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது, புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல் 5 தொழில் நுட்பம், ஆப் லைன் அப்ளிகேஷன், சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக பார்க்காக முடியாது. அதுவும் தமிழர்களாகிய எங்களுக்கு தமிழ் எழுத்துக்களை பார்க்கமுடியாது. இணையதளங்களின் காணப்படும் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாதுள்ளது. இது போன்று பல குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. எல்லா குறைகளையையும் நிவர்த்தி செய்வதற்காக ஸ்கைபயர் (Skyfire) வெளிவந்துள்ளது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் பார்க்கக்கூடியதாகவுள்ளது. மொத்தத்தில் கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு skyfire
செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
ஒபேராவில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ……
1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசி மூலம் Opera Mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து SAVE செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)
6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.
Director : Gregg Helvey
Writer : Gregg Helvey (writer)
Awards : Nominated for Oscar.
Cast(Credited cast)
Sagar Salunke - Kavi
Ulhas Tayade - Boss
Rajesh Kumar - Father
Madhavi Juvekar - Mother
Debu Bhattacharya - Social Worker 1
Rishi Raj Singh - Social Worker 2
Mukesh Barahti - Guard
Runtime : 19 min
எங்கு பார்த்தாலும் எல்லோரும் அவதார் என்றுதான் பேச்சாக இருக்கிறது. 'அவதார்' மற்றும் 'தி ஹர்ட்லாக்கர்' ஆகியவை. இந்த இரண்டு படங்களும் தலா 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. ஒரு இந்திய படமும் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். பரபரப்பு இல்லாமல் அஸ்காரில் கடைசிச்சுற்றில் இருக்கிறது இந்திப்படமான இந்த "கவி". இது "Short Flim" - Live actions - பிரிவில் வருது. இந்த படம் இந்தியாவில் இருக்கும் அடிமைத்தனம் பற்றி கூறுகிறது.
படிக்க, விளையாட விரும்பும் ஒரு சிறுவன் வேலைக்கு செல்வதற்காக கட்டாயப்படுத்த படுகிறான். இப்படிப்பட்ட அடிமைத்தன வாழ்க்கையை 19 நிமிடங்களில் தயாரிப்பாளர் மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். நாங்களும் அஸ்கார் விருதைப்பெற்று வர வாழ்த்தியனுப்புவோம்.
- அடிமையாக சலுகைகளை மட்டும் பெற்று வாழ போறோமா
- நாம் தனித்துவமான இனம் என்று புரிய வைக்க போறோமா
நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்
ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலே
இசை: பரத்வாஜ்
கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்
இணை இயக்கம்: அஜீத்
இயக்கம்: சரண்
தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்
.jpg)

கொலிவூட் இனி திருவிழாக்கோலம் காணவிருக்கிறது. காரணம் உலகிலேயே உயர்ந்த சினிமா விருதான “ஆஸ்கார்” விருது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரிவிலும் பல படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
இவற்றில் இருந்து சிறந்த படம், சிறந்த நடிகர், டைரக்டர் போன்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அவதார்' மற்றும் 'தி ஹர்ட்லாக்கர்' ஆகியவை. இந்த இரண்டு படங்களும் தலா 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
“இன்குளோரியன் பேஸ்டர்ட்ஸ்” படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 'பிரீசியஸ்' 'அப் இன் த ஏர்' ஆகியவை தலா 6 விருதுகளுக்கு பரிந் துரை செய்யப்பட்டு உள்ளது.
அவதார் படம் வேற்று கிரக மனிதர்கள் பற்றிய கதை. உயர் தொழில் நுட்பம் பாவிக்கப்பட்டு விஞ்ஞான ரீதியில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த படத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 9 விருதுகள் விவரம்,
1. சிறந்த படம்
2. சிறந்த இயக்குனர்
3. சிறந்த ஒளிப்பதிவு
4. கலை இயக்குனர்
5. எடிட்டிங்
6. இசை
7. சவுண்ட் எடிட்டிங்
8. சவுண்ட் மிக்சிங்
9. விஷூவல் எபெக்ட்ஸ்.
9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இன்னொரு படமான “தி ஹர்ட் லாக்கர்” ஈராக் போரை பற்றிய கதை. இந்த படத்தை அவதார் பட டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரீன் இயக்கி இருந்தார்.
இதன் பரிந்துரை விவரம்
1. சிறந்த படம்
2. சிறந்த நடிகர்
3. ஒளிப்பதிவு
4. இயக்குனர்
5. இசை
6. சவுண்ட் எடிட்டிங்
7. சவுண்ட் மிக்சிங்
8. திரைக்கதை
9. எடிட்டிங்
சிறந்த நடிகர்களாக ஜார்ஜ் குரூனி (படம்- ஆப் இன் த ஏர்), ஜெப்பிரிட் ஜஸ் (கிரேசி ஹார்ட்), காலின் பெர்த் (ஏ சிங்கிள் மேன்), மார்கான் பிரீமென் (இன்விக்டஸ்), ஜெர்மி ரெனர் (தி ஹர்ட் லாக்கர்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
சிறந்த நடிகைகளாக சண்ட்ரா புல்லாக் (தி பிளைண்ட் சைடு), ஹெலன் மிரென் (தி லாஸ்ட் ஸ்டேசன்), கேரி முலிகான் (அன் எஜுகேசன்), மெர்யி ஸ்டிரட் (ஜுலி அன்ட் ஜுலியா), கேபுரி (பிரீசியஸ்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.
பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் சிறந்த படம் எது, டைரக்டர், நடிகர் யார் என்பதை ஆஸ்கார் விருது குழு உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள்.
கடந்த தடவை 2 ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டும் ஆஸ்கார் விருது பரிந்துரையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. “கப்பிள் ரீடிரீட்” படத்தில் அவர் அமைத்த “நானா” என்ற பாடல் சிறந்த பாடல் போட்டியில் இருந்தது. ஆனால் அந்த பாடல் கடைசியில் பரிந்துரையில் இடம்பெறாமல் போய்விட்டது.