Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com



உலகின் மிகச்சிறந்த பிரவுசர் எது என்று பார்த்தால் அது பயர்பாக்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய தொகுப்பினை மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதிய பயர்பாக்ஸ் முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம்வேகமாக உள்ளதாக சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர்.



ஒப்பரா(Opera) பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகமாக இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.

இந்த பிரவுசரில் பெர்சனாஸ் காலரி நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. ஒரு பெர்சனாஸ் காலரி மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம்.

பிரபலமான இன்டர்நெட் பிரவுசர்களின் தரவரிசை இங்கே சென்று நீங்கள் பார்வையிடலாம். பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனையும் உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.



இங்கே சிறப்பம் என்ன வென்றால் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது. இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது, புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல் 5 தொழில் நுட்பம், ஆப் லைன் அப்ளிகேஷன், சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.

0 comments:

Post a Comment