Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com

யாழ்ப்பாணத்தின் முக்கிய குளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தலா 100 ஏக்கர் காணிகளில் சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை சுற்றுலாத்துறை அமைச்சு அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் அவர்களைக் கவரும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றதன.

இதன் ஒரு படியாக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த முக்கிய குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. குளத்திலுள்ள தாவரங்கள் மற்றும் சேறு என்பன இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளைப் பிரதேச சபைகள் மேற்கொண்டு வருகின்றன.


குளங்கள் புனரமைக்கப்பட்டு, நீரும் சுத்திகரிக்கப்பட்டு குளங்கள் அருகில் அழகு நிறைந்த காட்சிகளை உருவாக்கி, நிழல் குடைகள், சாய்மனைகள் (பென்ச்) கட்டப்படவுள்ளதாக குளங்கள் சுத்திகரிக்கும் தொழில்நுட்ப அலுவலகர் ஒருவர் தெரிவித்தார்.

=====================

தென்பகுதி குளங்கள் விவசாயத்துக்கும், யாழ் பகுதி குளங்கள் சிங்களவரின் சுற்றுலா - கேளிக்கைக்கும்.
யாழ் மாநகர சபை போகும் போக்கு எங்கே?

யாழ் மக்கள் விழிப்படைந்து வரும் தேர்தலில் பாடம் புகட்டுவரா?




0 comments:

Post a Comment