Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com


பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக பார்க்காக முடியாது. அதுவும் தமிழர்களாகிய எங்களுக்கு தமிழ் எழுத்துக்களை பார்க்கமுடியாது. இணையதளங்களின் காணப்படும் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாதுள்ளது. இது போன்று பல குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. எல்லா குறைகளையையும் நிவர்த்தி செய்வதற்காக ஸ்கைபயர் (Skyfire) வெளிவந்துள்ளது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் பார்க்கக்கூடியதாகவுள்ளது. மொத்தத்தில் கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.


தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.



ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு skyfire

செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.



ஒபேராவில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ……

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.

2. கையடக்க தொலைபேசி மூலம் Opera Mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.

4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து SAVE செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)

6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.

1 comments:

எந்த மாடல் செல்போனில் வேண்டுமானலும் இதை உபயோகிக்கலாமா? எனது செல்போன் சோனி எரிக்சன் Z550 மாடல். இதில் உபயோகம் செய்ய முடியுமா?

Post a Comment