Tamil Radios by Puthiyayukam

Tamil Radios 50+ Online Radio

CHOOSE YOUR SONGS AND RADIO

Submit your Radio/FM to puthiyayukam@gmail.com



கொலிவூட் இனி திருவிழாக்கோலம் காணவிருக்கிறது. காரணம் உலகிலேயே உயர்ந்த சினிமா விருதான “ஆஸ்கார்” விருது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரிவிலும் பல படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் இருந்து சிறந்த படம், சிறந்த நடிகர், டைரக்டர் போன்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அவதார்' மற்றும் 'தி ஹர்ட்லாக்கர்' ஆகியவை. இந்த இரண்டு படங்களும் தலா 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

“இன்குளோரியன் பேஸ்டர்ட்ஸ்” படம் 8 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 'பிரீசியஸ்' 'அப் இன் த ஏர்' ஆகியவை தலா 6 விருதுகளுக்கு பரிந் துரை செய்யப்பட்டு உள்ளது.

அவதார் படம் வேற்று கிரக மனிதர்கள் பற்றிய கதை. உயர் தொழில் நுட்பம் பாவிக்கப்பட்டு விஞ்ஞான ரீதியில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.


இந்த படத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 9 விருதுகள் விவரம்,

1. சிறந்த படம்

2. சிறந்த இயக்குனர்

3. சிறந்த ஒளிப்பதிவு

4. கலை இயக்குனர்

5. எடிட்டிங்

6. இசை

7. சவுண்ட் எடிட்டிங்

8. சவுண்ட் மிக்சிங்

9. விஷூவல் எபெக்ட்ஸ்.

9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இன்னொரு படமான “தி ஹர்ட் லாக்கர்” ஈராக் போரை பற்றிய கதை. இந்த படத்தை அவதார் பட டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரீன் இயக்கி இருந்தார்.



இதன் பரிந்துரை விவரம்

1. சிறந்த படம்

2. சிறந்த நடிகர்

3. ஒளிப்பதிவு

4. இயக்குனர்

5. இசை

6. சவுண்ட் எடிட்டிங்

7. சவுண்ட் மிக்சிங்

8. திரைக்கதை

9. எடிட்டிங்

சிறந்த நடிகர்களாக ஜார்ஜ் குரூனி (படம்- ஆப் இன் த ஏர்), ஜெப்பிரிட் ஜஸ் (கிரேசி ஹார்ட்), காலின் பெர்த் (ஏ சிங்கிள் மேன்), மார்கான் பிரீமென் (இன்விக்டஸ்), ஜெர்மி ரெனர் (தி ஹர்ட் லாக்கர்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

சிறந்த நடிகைகளாக சண்ட்ரா புல்லாக் (தி பிளைண்ட் சைடு), ஹெலன் மிரென் (தி லாஸ்ட் ஸ்டேசன்), கேரி முலிகான் (அன் எஜுகேசன்), மெர்யி ஸ்டிரட் (ஜுலி அன்ட் ஜுலியா), கேபுரி (பிரீசியஸ்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் சிறந்த படம் எது, டைரக்டர், நடிகர் யார் என்பதை ஆஸ்கார் விருது குழு உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள்.




கடந்த தடவை 2 ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டும் ஆஸ்கார் விருது பரிந்துரையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. “கப்பிள் ரீடிரீட்” படத்தில் அவர் அமைத்த “நானா” என்ற பாடல் சிறந்த பாடல் போட்டியில் இருந்தது. ஆனால் அந்த பாடல் கடைசியில் பரிந்துரையில் இடம்பெறாமல் போய்விட்டது.

0 comments:

Post a Comment